Tuesday, 14 June 2011

முருகன் - பார்த்தால் பசி தீருமா? பசி வருமா??

பார்த்தால் பசி தீரும் என்பார்கள்!
ஆனால் எனக்கு, அவனைப் பார்க்கப் பார்க்க, பசி தான் இன்னும் அதிகமாகும்... :)

பின்னே? படையலில் வச்சிருக்கும் தேன், தினைமாவு, அப்பம், அதிரசம் - இதெல்லாம் பார்த்தால்?
இதெல்லாம் கூட சமாளிச்சிறலாம்...
ஆனால் அவன் இதழ்க் கோட்டோரம் அந்தச் செழும்-செவ்-இதழ்கள்...அதைப் பார்த்தால்...பசி அல்லவோ அதிகமாகிறது? :) 



பன்னிரு விழி அழகை, முருகா 
பார்த்தால் பசி வருமா? - உன்
 
பனிமொழி வாய்த் தமிழை, முருகா
 
கேட்டால் துயர் வருமா?

(பன்னிரு விழி அழகை)

கண் இரண்டு இருந்தென்ன - உன் 
கதிர்வேல் அழகைப் பாராமல்?
 
கால் இரண்டு இருந்தென்ன - உன்
 
குன்றத்தில் வந்து சேராமல்?

(பன்னிரு விழி அழகை)

பொன் பொருள் எதற்காக - உன் 
புன்னகை இன்பம் இல்லாமல்?
 
என்னுயிர் எதற்காக - உன்

இணையடிப் போற்றிக் கொள்ளாமல்?
(பன்னிரு விழி அழகை)

ஓசைகள் எதற்காக - ஓம்
ஓம் என்று
 ஒரு தரம் பாடாமல்?
ஆசைகள் எதற்காக - உன் 
அருள் பெறும் வழியை நாடாமல்?

(பன்னிரு விழி அழகை)

முருகா ... முருகா ...
முருகா ... முருகா ...




No comments:

Post a Comment