Tuesday 14 June 2011

முருகனை மனமாரத் துதிக்கும் எளிய தமிழ்ப்பாடல்


சிந்தனை செய் மனமே…
சிந்தனை செய் மனமே தினமே
சிந்தனை செய் மனமே – செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே – செய்தால்
தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே – மனமே…..
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை ஞான தேசிகனை
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை – செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே – செய்தால்
தீவினை அகன்றிடுமே – சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே – மனமே
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே
அருமறை பரவிய சரவணபவ குகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே – செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே – மனமே …

என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா
முருகா… (என்ன கவி பாடினாலும்)
அன்னையும் அறியவில்லை
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
மாமியோ பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை (என்ன கவி பாடினாலும்)
அக்ஷரலக்ஷம் தந்த
அண்ணல் போஜ ராஜன் இல்லை
பக்ஷமுடனே அழைத்து
பரிசளிக்க யாரும் இல்லை
இக்கணத்தில் நீ அன்றி எனக்கோர் குறையுமில்லை
இக்கணத்தில் நீ அன்றி எனக்கோர் குறையுமில்லை
லக்ஷியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை
(அ) லக்ஷியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா
முருகா…
என்ன கவி பாடினாலும் பாடினாலும்….

No comments:

Post a Comment