Tuesday, 13 December 2011

பழநி முருகனின் கோவண ரகசியம்!

Image

ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.

Saturday, 19 November 2011

கந்த சஷ்டி

கந்த சஷ்டி நோன்புபற்றி ஒரு புராண வரலாறுண்டு. பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப்பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடமிருந்து மேலான சக்தியினைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம், சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும் நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

மாயை காரணமாக தோன்றிய அந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு)கொண்டு காணப்பட்டனர். இந்நால்வரும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். இவர்களின் கடுந்தவத்திற்கு இரங்கிய பரம்பொருள் இவர்கள் முன்தோன்றி வேண்டும் வரங்களை அருள்வதாகக் கூறி என் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியினால் உங்களை அழிக்க முடியாது என அருளினார். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். சூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் மூலம் ஆறு குழந்தைகளை உருவாக்கினார். அக்குழந்தைகள் சரவணப் பொய்கையில் ஆறு கார்த்திகைப் பண்களால் வளர்க்கப்பட்டு உரிய காலம் வந்ததும் ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியினால் ஒன்று சேர்க்கப்பட்டு ஆறுமுக சுவாமி எனப் பெயர் பெற்றார். இந்த ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்யும் போது மாயையினால் மாமரமாக நின்றான். அவனைத் தனது ஞான வேலால் பிளந்து அவனது ஆணவத்தினை அடக்கி சேவலும், மயிலுமாக மாற்றி சேவலை தன் கொடியாகவும் மயிலைத் தன் வாகனமாகவும் கொண்டு சூரனுக்கு சாரூப முத்தியை அருளி ஆட்கொண்டார். இவ்வாறே சிங்க முகன் தாருகன் என்போரின் அகங்கார மமகாரம் அழிக்கப்பட்டு இவர்கள் முறையே அம்பிகையினதும், ஐயனாரினதும் வாகனங்களாகி ஆட்கொள்ளப்பட்டனர். இவ்விரதத்தினை வாழ்க்கையில் எந்நிலையில் உள்ளவர்களும் தமக்கு வேண்டிய வரத்தினைப் பெற அனுஷ்டித்து அவற்றினை பெற்றுக் கொள்ளலாம் என்பது திண்ணம். ""மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்தருளும் ஏரகச் செல்வ'' எனும் வரிகளும் ""எந்த நாளும் ஈரேட்டாய் வாழ்வார்'' எனும் வரி மூலமும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு பேறுகளையும் தரவல்லது என்பதையும் அறியமுடிகின்றது. மேலும் கந்த சஷ்டி கவசம் என்னும் பாடலைப் பாடிய தேவராசன் சுவாமிகள் பல ஆண்டுகளாக மாறாத கொடிய வயிற்று வலியால் பீடிக்கப்பட்டு இருந்த போதிலும் இவ்விரதத்தினை அனுஷ்டித்து முருகன் அருளால் குணமடைந்தார்.

Thursday, 13 October 2011


31-10-2011- சூரசம்ஹாரம் கந்தசஷ்டி
            தீபாவளி பண்டிகைக்குப்பின் ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் இருப்பார்கள்.

இந்த சஷ்டி விழா பல தலங்களில் நடத்தப்பட்டாலும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடும் தலம் திருச்செந்தூர்தான். ஏனெனில் இங்குதான் செந்தில்நாதன் சூரனை சம்ஹரித்தார்.

சூரபத்மன் முற்பிறவியில் தட்ச னாக இருந்தான். பின் மாயைக்கும் காஸ்யப முனிவருக்கும் சூரபத்மனா கப் பிறந்து, தன் பேரன் குமரனால் வதம் செய்யப்பட்டு- வாழ்வளிக்கப் பட்டு, பேரனுடனேயே மயிலாகவும் சேவலாகவும் எப்போதும் இருக்கும் பேறு பெற்றான்.


மயில் வாகனம்

முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.


சிக்கல்

"சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம்' என்பர். சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும் பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர்.

சுக்ராச்சாரியார் அசுர குரு. அசுரர் குலம் தழைக்க அவர் விருப்பப்படி, அசுரமங்கை மாயை காஸ்யப முனிவரை மயக்கினாள். இருவருக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்க முகன், தாரகாசுரன் எனும் மூன்று மகன்கள். மகள் அஜமுகி. பின் மாயை முனிவரை விட்டு விலகிவிட்டாள்.

இந்த மூன்று அசுரர்களும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து பற்பல வரங்கள் பெற்றனர். பின் இவர்கள் சாமர்த்தியமாக ஒரு வரம் பெற்றனர். அதாவது சிவனின் சக்தியால் மட்டுமே அழிவு வரவேண்டும்; கர்ப்பத்தில்  பிறக்காத ஒரு ஆண் மகனால் மட்டுமே               இறக்க வேண்டும் என்பதுதான் அது. பின் அனைவருக்கும் பல துன்பங்களைத் தந்தனர். தேவர்களை அடிமைப்படுத்தினர்.

இதனால் தேவர்கள் சிவனிடம் முறையிட்ட னர். "என் ஆற்றலால் உருவாகும் மகனால் நன்மை பெறுவீர்கள்' எனக் கூறிய சிவன் தவத்தில் ஆழ்ந்தார்.

சிவனின் தவத்தைக் கலைக்க தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினர். அவன் எய்த அம்பால் சிவன் நெற்றிக்கண் திறக்க, மன்மதன் தகனமானான். பின் சிவன் தன் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜா தம், அதோமுகம் என்ற ஆறு முகங்களின் நெற்றிக்கண்களில் இருந்து ஆறு பொறிகளைத் தோற்றுவித்தார். (இப்படி காமதகனமும் ஆறு பொறிகளும் தோன்றிய தலம்தான் கொருக்கை. அதனால் இத்தலம் முருகன் பிறந்த தலம் என்கின்றனர். இது சீர்காழி- திருப்பனந்தாள் வழியில் மலைமேடு அருகேயுள்ளது.)

இந்த ஆறு பொறிகளும் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகள் ஆயின. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்ட இவர்களை பார்வதி பாசத்துடன் சேர்த்தணைக்க, ஓராரு முகமும் ஈராறு கரமும்  கொண்டு ஆறுமுகன் தோன்றினான். இவன் வளர்ந்து குமரன் ஆனதும் (கர்ப்பவாசமின்றி பிறந்தவன்) சிவன் முருகனது அவதார நோக்கத்தைக் கூறி சூரனை வதம் செய்யச் சொன்னார்.

சிவன் தன் ஆற்றல்களைத் திரட்டி ஒரு வேலாக்கி, அந்த சிவசக்தி வேலை முருகனுக்குக் கொடுத்து, வீரபாகு தலைமை யில் படைகளை உருவாக்கி அவர்களையும் முருகனுடன் அனுப்பினார். சக்தியும் தன் சக்தியத்தனையையும் திரட்டி ஒன்றாக்கி சக்தி வேலாயுதம் செய்து முருகனிடம் கொடுத்தாள். (அதைத்தான் சிக்கலில் வாங்குகிறார்.) 

இப்படி போரிடச் சென்ற முருகன், முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

குமரன் சூரனை வதம் செய்யப் போரிடும்போது சூரபத்மன், "இந்த சிறுவனையா கொல்வது? வேண்டாம். எனினும் போரில் நான் வெல்ல வேண்டும்' என எண்ணிப் போரிட்டான். இதை அறிந்த கந்தன் தன் விஸ்வரூபத்தை ஒரு நொடி காட்டினான். அப்போது சூரன் இந்த சிறுவன் தன் பேரன் என்பதை உணர்ந்தான். ஒரு நொடிப் பொழுதுதான்; பின் மறந்தான். அந்த ஒரு நொடியிலேயே முருகனிடம் "உன்னைத் தாங்கும்பேறு தருவாயா?' என கேட்டும் விட்டான்.

எனவே தாத்தாவைக் கொல்ல மனமின்றி முருகன் போர் செய்து கொண்டி ருந்தபோது, சூரபத்மன் மாமரமாகி கடலில் தலைகீழாய் நின்றான். குமரன் தன் கூர்வேலால் மாமரத்தை இருகூறாக்கி, ஒன்றை தன்னைத் தாங்கும் வாகனமான மயிலாகவும்; ஒன்றை சேவலாக்கி தன் கொடியிலும் வைத்துக்கொண்டு சூரனுக்குப் பெருவாழ்வு கொடுத்தான். சூரசம்ஹாரம் முடிந்தது. சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. 

ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள்.

சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பி னான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத் தைக் காணலாம்.
சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.


திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா

            ந்த ஆறு நாட்களும் வேள்விக் கூடத்தில் காலையும்  மாலையும் வேள்வி நடத்துவார்கள். பின் செந்தில்நாதன், வள்ளி, தெய்வானை உற்சவர்களை தங்க சப்பரத்தில் இருத்தி வீதியுலா வரச் செய்து சண்முக விலாச மேடையில் தீபாராதனை செய்வர்.


ஒவ்வொரு நாள் இரவும் சஷ்டி மண்டபத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்கத் தேரில் வலம் வரச் செய்வார்கள். அப்போது அடியார்கள் வேல் வகுப்பு, திருப்புகழ், வீரவாள் வகுப்பு பாடியபடி செல்வார்கள்.

ஆறாம் நாள் மாலை கடற் கரையில் சூரசம்ஹாரம் நடக்கும். அப்போது கடலும் உள்வாங்கி இடம் தரும். இந்நிகழ்ச்சியைக் காண பக்தர் கூட்டம் அலை மோதும். பார்க்கும்போது            தலையா கடல் அலையா எனத் தோன்றும். 


முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமங்களுக்குச் சமம் என்பர்.


ணவம், அகங்காரம் அதிகமானால் அதனை அழித்திட ஆண்டவன் அவதாரம் செய்கிறான்.

இரண்ய கசிபுவின் ஆணவத்தை மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அழித்தார்.

அகங்காரம், காமவெறி கொண்ட இராவ ணேஸ்வரனை மகாவிஷ்ணு மனித அவதார மாக- ராமனாக உருக்கொண்டு அழித்தார்.

சூரபத்மாதியர்களை பரமசிவனே மறுவுருவமாக- சுப்ரமண்யனாக உதித்து அழித்தார். 


மற்ற அசுரர்கள் அழிவை வதம் என்கிறோம்; சூரபத்ம அழிவை சம் ஹாரம் என்கிறோம். என்ன வேறுபாடு? மாமரமான சூரனை முருகன் வேலால் துளைக்க, அதன் ஒரு பாதி மயிலாகி முருகனுக்கு வாகனமாகியது. மறுபாதி சேவலாகி, அதனைக் கந்தன் கொடியாக ஏந்தினான். அவர்கள் ஒப்பந்தமும் 

அவ்வாறே. இருவரும் மற்றவரை ஏந்த வேண்டும். இந்த மாதிரியான வினோதம் முருகப் பெருமானுக்கு மட்டுமே.



கஜமுகாசுரனை வென்ற கணபதிக்கு அசுரன் எலியாகி வாகனமானான்; ஆனால் 
அவனை கணபதி ஏந்தவில்லை.

சுப்ரமண்யன் உதித்தது வைகாசி விசாகப் பௌர்ணமி அன்று. விசாக நட்சத்திரத்தில் தோன்றிய மற்ற இருவர்- கணபதியும் ராதாதேவியும். ராதை- கண்ணன் மணமும் 

அந்த நாளில்தான் நடந்தது. 


சூரசம்ஹாரம் நடந்தது திருச்செந்தூர் என்பதால், கந்தனின் அவதார தின வைகாசி விசாகப் பெருவிழாவும் திருச்செந்தூரில் சிறப்பாக நடக்கிறது. மற்ற எல்லா இந்துக் கோவில்களிலும் இவ்விழா விமரிசையாகவே கொண்டாடப்படுகின்றன.

வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான்.
கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.

விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.

அக்னி ஏந்தியதால் அக்னி பூ.

கங்கை ஏந்தியதால் காங்கேயன்.

சரவணப் பொய்கையில் குழந்தையானதால் சரவண   பவன்.

கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டதால் கார்த்திகேயன்.

ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன், ஷண்முகன்.

ஆறு குழந்தைகள் ஒன்றியதால் ஸ்கந்தன், கந்தன்.

தமிழில் முருகு என்றால் அழகு; அழகானவன்- 

அதனால் முருகன். 

விசாகம், கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டவன் முருகன். இதுவும் ஒரு சிறப்பு.

கந்தனின் அவதார சமயம்... சிவ- பார்வதியுடன் கங்கையும் அக்னியும் அங்கிருந்தனர். அவன் யார்மீது அதிக அன்பு வைத்திருக்கிறான் என்பதை அறிய விரும்பி, ஒரே சமயத்தில் நான்கு பேரும் குழந்தையை அழைத்தனர். அவன்தான் சிவஞான பண்டிதனாயிற்றே! பாரதம் இவ்வாறு கூறுகிறது:

சிவன் தந்தை; அக்னி வளர்ப்புத் தந்தை.

பார்வதி தாய்; கங்கை வளர்ப்புத் தாய்.

அவன் ஸ்கந்தன், விசாகன், சாகன், நைகமேயன் என நான்கு உருவம் கொண்டான்.

சிவனிடம் ஸ்கந்தனும், பார்வதி யிடம் விசாகனும், அக்னியிடம் சாகனும், கங்கையிடம் நைகமேய னுமாகத் தாவிச்சென்று அனைவரையும் மகிழ்வித்தானாம்.


முருகு என்றால் தமிழில் அழகு. இதில் மற்றொரு தத்துவ மும் உண்டு. அத்ரிக்கும் அனுசூயா தேவிக்கும் வினோதமாக உதித்த குழந்தை தத்தாத்ரேயர். பிரம்மா, விஷ்ணு, சிவ ஐக்கியமான உடல்; மூன்று தலை; ஆறு கைகள். இதற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்?

மு என்றால் முகுந்தன்- அதாவது விஷ்ணு.

ரு என்றால் ருத்ரன்- அதாவது சிவன்.

கு என்றால் கமலத்தில் உதித்தவன்- அதாவது பிரம்மன்.

அதிகமாக மகாராஷ்டிரத்தில் தத்தாத் ரேயரை பரமகுருநாதராக வணங்குவர். மகா விஷ்ணுவை ஹயக்ரீவ அவதாரத்தில் ஞானகுருவாக வைணவர்கள் வணங்குவர். கிருஷ்ண அவதாரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து "கிருஷ்ணம் வந்தே ஜகத்குரு' என போற்றப்படுகிறார்.

பரமசிவன் தட்சிணாமூர்த்தியாக- ஞானமௌன குருவாக மதிக்கப்படுகிறார்.

பிரம்மன் வேதத்தையே கையில் கொண்டிருந்தாலும் அவரை குருவாக- ஏன் ஒரு தெய்வமாகக்கூட  கோவில்களில் வணங்குவதில்லை. காரணம், அருணாசலத்தில் பொய் கூறினார். சதுர்வேத புருஷன் என்று மார்தட்டினாலும், "ஓம்' என்னும் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல முடியாமல் முருகனால் சிறையிலிடப்பட்டார். "நீ அறிவாயோ' என சிவன் கேட்க, "கேட்கும் முறையில் கேட்கத் தயாராயிருந்தால் சொல்வோம்' என்று, தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன்- சிவகுருநாதன்- தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்றவன் முருகன்! 

சிவன், பிரம்மன் மட்டுமல்ல; மாமன் விஷ்ணுவும் முருகனைப் பணிந்தவரே. விஷ்ணுவின் சக்கரம் திருத்தணிகை முருகன் மார்பில் பதிந்து விட்டபோது, அதை பெருமாள் பணிந்து கேட்க, முருகன் எடுத்து அளித்தானாம். இன்றும் தணிகேசனின் மார்பில் சக்கரம் பதிந்த அடையாளம் இருக்கி றது. அதை சந்தனத்தால் மூடுகிறார்கள். 

எனவே, ஸ்கந்தன் (ஒன்றியவன், சேர்ந்தவன்) ஞானஸ்கந்தன்- ஞானபண்டிதன்- ஞானகுருநாதனாக வணங்கப்படுகிறான். 

குகன் என்ற பெயர், பக்தர்களின் இதயக் குகையில் இருக்கும் எந்தக் கடவுள்களுக்கும் ஒப்பும் என்றாலும், முருகனுக்கே அது உரியதாக உள்ளது. காசியிலிருந்து திரும்பிய முத்துசுவாமி தீட்சிதர் திருத்தணிகை வந்து, முதன்முதலாக "ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி' என்று பாடினார். 

ஸ்ரீவைகுண்டம் வாழ் குமரகுருபரன் ஊமை யாக இருக்க, திருச்செந்தூரில் 42 நாட்கள் விரதமிருந்து பயன் கிட்டாததால் கடலில் விழ யத்தனித்தபோது, அர்ச்சகர் வடிவில் வந்த முருகன் பூவைக் காட்ட, ஊமையாக இருந்த குமரகுருபரன் "பூமருவும்' என்று தொடங்கி கந்தர் கலிவெண்பா பாடினான் என்றால், முருகனின் அருளை என்ன சொல்வது!

காஞ்சி குமரக்கோட்டத்திலும் கச்சியப்ப சிவாச்சாரியருக்கு "திகடச்சக்கர' என ஆனைமுகன் பாடலை அடி எடுத்துக் கொடுத்து தமிழில் கந்தபுராணம் பாட வைத்தார்.
அக்கோவிலிலேயே அரங்கேற்றம் செய்தபோது- அந்த ஆரம்ப அடியே இலக்கணக் குற்றம் என ஒரு புலவர் சொல்ல, முருகனே முதிர்ந்த புலவனாக வந்து தெளிவு ஈந்து முருக தரிசனமும் தந்தாரென்றால் கந்தன் கருணையை என்ன சொல்வது!

முற்காலத்தில் பஞ்சாயதன பூஜை என்ற வழக்கமிருந்தது. சிவன், அம்பிகை, கணபதி, விஷ்ணு, சூரியன் ஆகியோரே அதற்குரிய தெய்வங்கள். சிவ பஞ்சாய தனம்  என்றால், சிவன் நடுவே இருப்பார். மற்ற நான்கு தெய்வ வடிவங்கள் நான்கு புறமும் இருக்கும். இதனில் முருகன் இல்லை.
திருச்செந்தூர் முருகன் ஆதிசங்கரரிடம் சிறிது விளையாடினான். சங்கரருக்கு நோய் ஏற்பட்டது. செந்தூர் முருகன்மீது அவர் புஜங்கம் பாட, நோய் தீர்ந்தது. அதன்பின் முருகனை பஞ்சாயதன தெய்வ ரூபங்களுடன் சேர்த்து "ஷண்மதம்' என போற்றி வழிபட வகுத்தார். என்னே முருகன் பெருமை! ஷண்முகனே ஷண்மதம் என போற்றும் அளவுக்கு பக்தர்கள் வழிபடு கிறார்கள்.

எனவே முருகனை நாம் நம்பிக்கையுடன் வணங்கிட, புனித கங்கை போன்று ஆறாக அருள் மழை பெய்து, அவகுணங்களை அடியோடு அழித்து, ஞானானந்த பிரகாசத் தில் நம்மை ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்வோம்; குகமயமாக ஆவோம்.


ஸர்வம் குஹ மயம் ஜகத்.

வேலுண்டு வினையில்ல; மயிலுண்டு பயமில்லை; சேவலுண்டு ஏவலில்லை; குகனுண்டு குறைவேயில்லை!


 சஷ்டிக்கு இன்னொரு காரணம்!


தமிழகத்தில் ஐப்பசி அமாவாசைக்குப் பின் (தீபாவளி) வரும் சஷ்டி திதி அன்று முருகப் பெருமானைப் போற்றி விரதம் கடைப்பிடித்து சஷ்டி விழா கொண்டாடுவதுபோல், வடநாட்டில் சில இடங்களில் ஐப்பசி சஷ்டியன்று சட் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு நடைபெறுகிறது. இந்த விழா நீர் நிலைகளில் நடைபெறும் விழாவாகும். 

சுமங்கலிப் பெண்கள் தங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் நலமுடன் இருக்க மூன்று நாட்கள் விரதம் கடைப்பிடித்து இவ்வழிபாட்டினைச் செய்கிறார்கள்.



கங்கை நதி ஓரங்களிலும்; பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலும் சூரிய பூஜையை நடத்துவது வழக்கம்.

பூஜைப் பொருட்களான வெற்றிலைப் பாக்கு, பூ, பழங்கள், தேங்காய், சந்தனம், கரும்பு, இனிப்புகள், பலகாரங்களை பெரிய கூடையில் வைத்து ஆண்கள் நீர் நிலைக்கு எடுத்து வருவார்கள். நதிக்கரையோரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, கரும்புகளால் கூடாரம்போல் அமைத்து, அதில் பூஜைக்குரிய பொருட்களை வைப்பார்கள்.


சுமங்கலிகள் சஷ்டி அன்று மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையிலும், மறுநாள் விடியற்காலையிலும் நீராடி, சூரியன் உதயமானதும் நீர் நிலைக்குள் நின்று சூரியனுக்கு அர்க்கியம் விட்டு, மந்திரம் சொல்லி பூஜை செய்வார்கள்.


மாலையிலும் காலையிலும் சூரியனை வழிபடுவதன் நோக்கம்- இரவும் பகலும் எப்படி சமமாக உள்ளதோ (ஐப்பசியில் இரவும் பகலும் சமமாக இருக்கும்) அதுபோல இன்பமும் துன்பமும் வாழ்வில் சமமாக இருப்பதாகச் சொன்னாலும், தாங்களும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும் நலமுடனும் சுகமுடனும் வாழவேண்டும் என்று சூரியனைப் பிரார்த்திப்பதே சூரிய சஷ்டி வழிபாட்டின் குறிக்கோளாகும்.



இந்தப் பூஜையை சட் பூஜை, ரவிசஷ்டி என்று வடமாநிலத்தவர்கள் போற்றுகிறார்கள்.

Friday, 5 August 2011

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!





1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு  அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின்  12 தோள்களை குறிக்கும்.  18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும்.  ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
பாம்பன் சுவாமிகள் விளக்கம்
ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.






செவ்வாய் வருவாய் நலம் பல தருவாய்!




செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்:தமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். கல்வியறிவு மிக்க இந்த மாநிலத்தில் செவ்வாய் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடியை சூன்ய மாதம் என்பர். ஆனால், தள்ளுபடி விற்பனையோ அமோகமாக நடக்கிறது.
நிலம் வழங்கும் கிரகம்: பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு செலுத்தும் நன்றிக்கடனாகும். பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடுவது நன்மை தரும். பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார். நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக் காப்பவனே! என்று பாடுகிறார். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே  நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும். ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
கிழமை ஒரு தடையல்ல:அட்சயதிரிதியை, ஆடிப்பெருக்கு நாட்களில் மக்கள் பொன், பொருளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். 1988 ஏப்ரல்19, 1992 மே5, 1995 மே2ல், அட்சயதிரிதியை செவ்வாயன்று வந்தது. 2010 ஆகஸ்ட்3ல் ஆடிப்பெருக்கு செவ்வாயில்அமைந்தது. இந்த நாட்களில் பொன், பொருள் வாங்கியவர்கள், கிழமையை மனதில் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், செவ்வாயன்று பொருள் வாங்கும் சிலர் வழக்கத்தை விட அதிக பலனே பெறுகின்றனர்.

பழநி முருகனின் கோவண ரகசியம்!



ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.

உயிர் காக்கும் ஒப்பற்ற கவசம் எது தெரியுமா?


உயிரைக் காக்க அக்காலத்தில் மன்னர்கள் இரும்புக்கவசம் அணிந்து கொண்டனர். அதுபோல, கவச நூல்களைப் பாராயணம் செய்தால் நம்மைச் சுற்றி தெய்வத்தின் மந்திரசக்தி கவசமாகத் துணைநிற்கும் என்பர். கவசப்பாடல்களில் கந்தசஷ்டி கவசம் மிகவும் புகழ்பெற்றது. தேவராய சுவாமிகளால் எழுதப்பட்ட இந்நூல், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அரங்கேற்றப்பட்டது. காங்கேயத்தை மையமாகக் கொண்டு சென்னிமலை, ஊதிமலை, வட்டமலை, சிவன்மலை,திருமுருகன்பூண்டி ஆகிய மலைகள் உள்ளன. இவற்றில் தலைசிறந்தது சென்னிமலை. சென்னி என்ற சொல்லுக்கே தலை என்று தான் பொருள். சிரகிரி, சென்னியங்கிரி, புஷ்பகிரி, சிகரகிரி என்ற பெயர்களும் இதற்குண்டு. தேவராய சுவாமிகள் கவசத்தில் சிரகிரி வேலா சீக்கிரம் வருக! என்று இத்தல முருகனை வேண்டுகிறார். இங்கு மூலவராக கைலாசநாதரும், பெரியநாயகியும் வீற்றிருக்கின்றனர். புண்ணாக்குச் சித்தருக்கு சமாதியும் இங்குள்ளது. கந்தசஷ்டியும், தைப்பூசமும் சிறப்பான விழாக்கள். அக்னிஜாத சுப்பிரமணியர், சவுரபேய சுப்பிரமணியர், சரவணபவன், தேவசேனாதிபதி ஆகிய பெயர்களிலும் முருகப்பெருமான் கோஷ்டத்தில் வீற்றிருக்கிறார்.

Saturday, 9 July 2011

http://www.youtube.com/watch?v=s5HKS8LxJA8&feature=player_detailpage

Friday, 8 July 2011



ந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களை தான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை- செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. இந்த சூட்சுமம் புரியாத சிலர்தான் கடவுளர் பற்றிய கதைகளையும் வடிவங்களையும் ஏளனம் செய்வதில் ஆனந்தம் அடைகிறார்கள்.



பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை? ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது, பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி. உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. "இது இப்போது உனக்கு வேண்டாம். உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. தனியே ஓடு; குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். தவம் செய். நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப் பழம்- ஞானப்பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய்' என்பதுதான் முருகக் கடவுளின் கோபம் கூறும் செய்தி.

சரி; அந்த அறுபடை நாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே- இதற்கென்ன பொருள்? தெய்வானை இந்திரனின் மகள்; தேவ அம்சம்; வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும் தத்துவம். வள்ளி என்பது பூமியின் உறவு; சாதாரணருக்கும் தெய்வ சங்கமம் கிடைக்கும் நிகழ்வு. கடவுள் தன்மையை- உயர் யோக நிலையை மட்டுமல்ல; இவ்வுலக வாழ்க்கைத் தேவையான பலத்தையும்- யோகத்தை மட்டுமல்லாது, போகத்தையும் அளிப்பவராக இருக்கிறார் கந்தக் கடவுள். விண்ணுலகம் செல்லும் வீடு பேற்றை மட்டுமல்ல; மண்ணுலக இன்பங்களையும் அளிக்க வல்லவர் வள்ளிமணாளன். இதை உணர்த்தும் தத்துவமே இருதாரமோடு நிற்கும் நிலை.

தீயவர்களை- அசுரர்களை அழித்ததற்கான பரிசாக முருகனுக்கு தெய்வானை கிடைத்தார். தீய குணங்களை அழிக்க அழிக்க தேவநிலை துணை வரும் என்ற செய்தி அதில் ஒளிந்துள்ளது. ஆனால், மண்ணில் வாழ பொருள் வசதி பெருக கஷ்டப்பட வேண்டும்; முயற்சி செய்ய வேண்டும். அதற்கு இறையின் துணையும் வேண்டும். முயற்சியும் இறைத்துணையும் அருகிருந்து போராட வெற்றி கிடைக்கிறது.

உலகியல் வாழ்வுக்கான வெற்றியைத் தருபவள் வள்ளி. வள்ளி என்பதன் சூட்சுமம் இதுதான். வள்ளி என்பது இவ்வுலக வெற்றி. தெய்வானை என்பது அவ்வுலக வெற்றி. இரண்டையும் அடைந்து, இரண்டையும் தருபவர் வேலவர்.

சரி; சேவற்கொடி எதற்கு? இவ்வுலக மாந்தர் விழிக்க குரல் கொடுக்கும் பறவை சேவல். விடியலைக் கொண்டாட அழைப்பு விடும் பறவை. உள்ளே உன்னித்து தியானநிலை அடையாது வெறுமனே உறங்குகின்ற மனிதர்களை, "எழுந்திருங்கள் எழுந்திருங்கள்; எழுந்து உள்ளே விழிப்படையுங்கள்' என்று அழைக்கும் விதமாக சேவற்கொடி.



பாம்பும் மயிலும் வேலும் என்ன சொல்கின்றன? உள்பொங்கும் சக்தியின் விழிப்பு நிலை பாம்பு. யோகவழி பயணிக்க பயணிக்க முகம் பொலிவுறும் சிறப்பைக் கூற மயில். தவிர, ஆசன வகைகளில் ஒன்றான மயூராசனத்தின் சிறப்பையும் அது உணர்த்துவதாக உள்ளது. மயூராசனம் என்பது கைகளின் வழியே உடலைத் தாங்கும் நிலை. இந்த ஆசனம் உள்ளுறுப்புகளை பலப்படுத்துவதோடு, குண்டலினி சக்தி விழிப்படையவும் உதவியாக இருக்கிறது. குண்டலி விழிப்பால் தன்னைப் பற்றி அறிவு மிகைப்படுகிறது. தன்னைப் பற்றிய கவனம் அதிகமாகிறது. செயல்களில் தெளிவும் பேச்சில் நிதானமும் ஏற்படும். மயிலாசனத்தின் செய்தி இதுவே.

"எப்போதும்... எப்போதும் உன்னுள்ளே தீயவை அகற்றும் பணியைச் செய்து கொண்டிருக்க சத்தியம் எனும் வேலைத் துணையாக வைத்திரு' எனும் செய்தி சரவணகுமரனின் வேல் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அவரின் படைவீடுகள் அமைந்திருப்பது அசுரரை அழிக்க மட்டுமல்ல; திசைதோறும் நின்று பக்தர்களைத் துரத்தும் துன்பங்களை நீக்கவும்தான். இந்த ஆறு படை வீடுகளை முழுமையான இறைநினைப்போடு தரிசித்தவர்கள் முருகக்கடவுளின் அருள் நிரம்பப் பெற்று வீடுபேறு அடைவார்கள்; விதியினை வெல்வார்கள்; காலத்தை ஊடுருவும் கலைகள் எல்லாம் கைவரப் பெறுவார்கள். மூலாதாரம்,  ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்னும் ஆறு சக்கரங்களின் இருப்பை தன்னுள் தரிசித்து, ஏழாவதாய் இருக்கும் சகஸ்ரார சக்கரத்தைத் தொடுவார்கள்.

வேலவன் பிரணவ மந்திரத்தின் பொருள் உணர்த்தும் தேவன். ஓமென்று உள் நின்ற உத்தமர்க்கெல்லாம் ஓடி வந்து உடன் உதவிடும் நாதன். வேண்டி நிற்பது எதுவாயினும் விரைந்து கொடுக்கும் குமரக்கடவுள். அபயம் என்றே அவனை நம்பி அனுதினமும் ஆறெழுத்தை ஜெபிப்போர்க்கு அன்பனாய்- நண்பனாய் வந்து நன்றாய் அருளிடும் அறுமுகத்தான். எண்ண எண்ண இன்னும் ஏராளம் உண்டு நம் அழகனின் பெருமைகள். இவை உணராமல் வாதம் செய்து பிறவிகள் வளர்ப்போரை- பிணி கண்டு தவிப்போரை விட்டுத் தள்ளுவோம்.


இந்து மதம் கூறும் இனிய தத்துவங்களை- அதன் ஆழங்களை- சூட்சுமங்களை சிந்திக்கத் தலைப்படுவோம். வானத்தை- பூமியை- நட்சத்திரங்களை- கோள்களை- இப்பெரிய பிரபஞ்சத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் மகத்தான சக்தியை ஏதேனும் ஒரு பெயரில் நித்தம் நித்தம் வணங்கி நின்றிடுவோம்.


ந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களை தான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை- செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. இந்த சூட்சுமம் புரியாத சிலர்தான் கடவுளர் பற்றிய கதைகளையும் வடிவங்களையும் ஏளனம் செய்வதில் ஆனந்தம் அடைகிறார்கள்.

பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை? ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது, பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி. உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. "இது இப்போது உனக்கு வேண்டாம். உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. தனியே ஓடு; குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். தவம் செய். நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப் பழம்- ஞானப்பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய்' என்பதுதான் முருகக் கடவுளின் கோபம் கூறும் செய்தி.

சரி; அந்த அறுபடை நாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே- இதற்கென்ன பொருள்? தெய்வானை இந்திரனின் மகள்; தேவ அம்சம்; வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும் தத்துவம். வள்ளி என்பது பூமியின் உறவு; சாதாரணருக்கும் தெய்வ சங்கமம் கிடைக்கும் நிகழ்வு. கடவுள் தன்மையை- உயர் யோக நிலையை மட்டுமல்ல; இவ்வுலக வாழ்க்கைத் தேவையான பலத்தையும்- யோகத்தை மட்டுமல்லாது, போகத்தையும் அளிப்பவராக இருக்கிறார் கந்தக் கடவுள். விண்ணுலகம் செல்லும் வீடு பேற்றை மட்டுமல்ல; மண்ணுலக இன்பங்களையும் அளிக்க வல்லவர் வள்ளிமணாளன். இதை உணர்த்தும் தத்துவமே இருதாரமோடு நிற்கும் நிலை.

தீயவர்களை- அசுரர்களை அழித்ததற்கான பரிசாக முருகனுக்கு தெய்வானை கிடைத்தார். தீய குணங்களை அழிக்க அழிக்க தேவநிலை துணை வரும் என்ற செய்தி அதில் ஒளிந்துள்ளது. ஆனால், மண்ணில் வாழ பொருள் வசதி பெருக கஷ்டப்பட வேண்டும்; முயற்சி செய்ய வேண்டும். அதற்கு இறையின் துணையும் வேண்டும். முயற்சியும் இறைத்துணையும் அருகிருந்து போராட வெற்றி கிடைக்கிறது.

உலகியல் வாழ்வுக்கான வெற்றியைத் தருபவள் வள்ளி. வள்ளி என்பதன் சூட்சுமம் இதுதான். வள்ளி என்பது இவ்வுலக வெற்றி. தெய்வானை என்பது அவ்வுலக வெற்றி. இரண்டையும் அடைந்து, இரண்டையும் தருபவர் வேலவர்.

சரி; சேவற்கொடி எதற்கு? இவ்வுலக மாந்தர் விழிக்க குரல் கொடுக்கும் பறவை சேவல். விடியலைக் கொண்டாட அழைப்பு விடும் பறவை. உள்ளே உன்னித்து தியானநிலை அடையாது வெறுமனே உறங்குகின்ற மனிதர்களை, "எழுந்திருங்கள் எழுந்திருங்கள்; எழுந்து உள்ளே விழிப்படையுங்கள்' என்று அழைக்கும் விதமாக சேவற்கொடி.

பாம்பும் மயிலும் வேலும் என்ன சொல்கின்றன? உள்பொங்கும் சக்தியின் விழிப்பு நிலை பாம்பு. யோகவழி பயணிக்க பயணிக்க முகம் பொலிவுறும் சிறப்பைக் கூற மயில். தவிர, ஆசன வகைகளில் ஒன்றான மயூராசனத்தின் சிறப்பையும் அது உணர்த்துவதாக உள்ளது. மயூராசனம் என்பது கைகளின் வழியே உடலைத் தாங்கும் நிலை. இந்த ஆசனம் உள்ளுறுப்புகளை பலப்படுத்துவதோடு, குண்டலினி சக்தி விழிப்படையவும் உதவியாக இருக்கிறது. குண்டலி விழிப்பால் தன்னைப் பற்றி அறிவு மிகைப்படுகிறது. தன்னைப் பற்றிய கவனம் அதிகமாகிறது. செயல்களில் தெளிவும் பேச்சில் நிதானமும் ஏற்படும். மயிலாசனத்தின் செய்தி இதுவே.

"எப்போதும்... எப்போதும் உன்னுள்ளே தீயவை அகற்றும் பணியைச் செய்து கொண்டிருக்க சத்தியம் எனும் வேலைத் துணையாக வைத்திரு' எனும் செய்தி சரவணகுமரனின் வேல் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அவரின் படைவீடுகள் அமைந்திருப்பது அசுரரை அழிக்க மட்டுமல்ல; திசைதோறும் நின்று பக்தர்களைத் துரத்தும் துன்பங்களை நீக்கவும்தான். இந்த ஆறு படை வீடுகளை முழுமையான இறைநினைப்போடு தரிசித்தவர்கள் முருகக்கடவுளின் அருள் நிரம்பப் பெற்று வீடுபேறு அடைவார்கள்; விதியினை வெல்வார்கள்; காலத்தை ஊடுருவும் கலைகள் எல்லாம் கைவரப் பெறுவார்கள். மூலாதாரம்,  ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்னும் ஆறு சக்கரங்களின் இருப்பை தன்னுள் தரிசித்து, ஏழாவதாய் இருக்கும் சகஸ்ரார சக்கரத்தைத் தொடுவார்கள்.

வேலவன் பிரணவ மந்திரத்தின் பொருள் உணர்த்தும் தேவன். ஓமென்று உள் நின்ற உத்தமர்க்கெல்லாம் ஓடி வந்து உடன் உதவிடும் நாதன். வேண்டி நிற்பது எதுவாயினும் விரைந்து கொடுக்கும் குமரக்கடவுள். அபயம் என்றே அவனை நம்பி அனுதினமும் ஆறெழுத்தை ஜெபிப்போர்க்கு அன்பனாய்- நண்பனாய் வந்து நன்றாய் அருளிடும் அறுமுகத்தான். எண்ண எண்ண இன்னும் ஏராளம் உண்டு நம் அழகனின் பெருமைகள். இவை உணராமல் வாதம் செய்து பிறவிகள் வளர்ப்போரை- பிணி கண்டு தவிப்போரை விட்டுத் தள்ளுவோம்.


இந்து மதம் கூறும் இனிய தத்துவங்களை- அதன் ஆழங்களை- சூட்சுமங்களை சிந்திக்கத் தலைப்படுவோம். வானத்தை- பூமியை- நட்சத்திரங்களை- கோள்களை- இப்பெரிய பிரபஞ்சத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் மகத்தான சக்தியை ஏதேனும் ஒரு பெயரில் நித்தம் நித்தம் வணங்கி நின்றிடுவோம்.

Monday, 27 June 2011

முருகன் கோபம் தணிந்த இடம்


முருகன் கோயில்களில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் விழா கந்தசஷ்டி பெருவிழாவாகும்.  இந்த விழா பத்து நாட்கள் நடக்கும் .  காஞ்சி, குமரக்கோட்டத்தில் பத்துநாள் புறப்பாடும் கோலாகமாக இருக்கும்.  முருகப் பெருமானின் சேனைத் தலைவனான வீரபாகுவின் வடிவத்தையும் அவனுடன் தோன்றிய மற்ற வீரபாகுகளின் வடிவத்தையும் வேடமிட்டு தாங்கி, கைகளில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு போர் முழக்கம் செய்து ஆர்ப்பரித்துச் செல்லும் நவவீரபாகுகளை பார்க்கும் போதே ஒரு பக்கத்தில் அச்சமும், இன்னொரு பக்கம் தெய்வீக உணர்வும் மேலிடும்.  திருத்தணியில் மட்டும்தான் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் இல்லை.  முருகப் பெருமான் கோபம் தணிந்து சாந்தமாக எழுந்தருளியிருக்கும் தலம் திருத்தணி. செரு என்றால் கோபம் செரு தணிந்த இடம் திருத்தணி என்பது புராணம்.
கந்தசஷ்டி பத்துநாள் விழாக்களில் நாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள சிக்கலில் முதல் நாள் விழா மிகவும் விசேஷம்.  சூரசம்ஹாரம் நிகழ்ந்த இடத்துக்கு அருகிலுள்ள திருச்செந்தூரில் பத்தாம் நாள் விழா சூரசம்ஹார விழா மிகவும் விசேஷம்.


Sunday, 26 June 2011

உலகக் கடவுள் முருகன்


குழுவாய்க் கூடி வாழத் துவங்கிய நம் முன்னோர் தம் தவ வலிமையால் கண்டுணர்ந்தனர் ஒரு மாபெரும் சக்தியை. அது எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையும், இப்புவியில் வாழும் உயிர்களையும் மிக முக்கியமாய் சிவந்த கிரகமான செவ்வாய் கிரகத்தை கட்டுப் படுத்துவதையும் அறிந்தனர். அதனை போர்க்கடவுள் என்றும் உணர்ந்து முருகன் என்று பெயரிட்டு வழிபடத்துவங்கினர்.
                        ஞானம் என்பது ஒரு நிலத்தில் மட்டுமே பூக்கும் பூ அல்ல. அது உலகம் முழுதும் மலர்கின்ற பொதுவான ஒரு விஷயம். முருகன் பற்றிய இதே கருத்தை இவ்வுலகத்தில் வாழ்ந்த வேறு சிலரும் அறிந்திருந்தனர். அதனைக் காண்போம் வாருங்கள்!


வேதம் உணர்ந்த ஸ்கந்தன்:
நாம் முருகனாய் உணர்ந்த அம்மாபெரும் சக்தியை ஸ்கந்தன் என்று உணர்ந்தனர் வேதம் அறிந்த ஞானிகள். ஸ்கந்தன் / கார்த்திகேயன் ஒரு போர்க்கடவுள் என்பதையும் ‘மங்கள்’ என்று வடமொழியில் அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் அதிபதி என்றும் கண்டுகொண்ட வேத மனம் அவரை ‘மங்களேஸ்வரர்’ என வணங்கி நல்வாழ்வு பெற்றது.

சைனீஸ் ஸ்கந்தன் /வே த்வோ (Wei Tuo):
இந்தியாவிலிருந்து சென்ற புத்த மதத்தால் ஞானத்தின் பல்வேறு நிலைகளை கண்டறிந்தனர் சைன தேசத்து ஞானிகள். புத்த மதம் சைனத்து பழங்குடி மதங்களோடு கலந்து அவர்களது ஆதி காலக் கடவுள்கள் சிலரையும் சுவீகரித்துக் கொண்டது. அதில் ஒருவர்தான் ஸ்கந்தன் என்றும் அழைக்கப்படும் போர்க்கடவுள் வே த்வோ.

கிரேக்க அரேஸ் (Ares):
தமிழ் இனத்தினைப் போலவே தொன்மையான நாகரீகமும் பண்பாடும் கொண்டது கிரேக்க இனம். நமது ஞானிகள் முருகனைக் கண்டறியும்போது அவர்களுக்கு மட்டும் இம்மாபெரும் சக்தி தெரியாமல் இருக்குமா என்ன? அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் அரேஸ். கிரேக்கத்துப் போர்க்கடவுள்.

ரோமானிய மார்ஸ் (Mars):
ஆம். செவ்வாய் கிரகத்தின் ஆங்கிலப் பெயரான மார்ஸ் ரோமானிய போர்க்கடவுளான மார்ஸ்-ஐக் குறிப்பதே. நாம் முருகனை அழைப்பது போன்றே, ரோமனியர் மார்ஸ் தங்களின் மூதாதையர் என்றும் தாங்கள் அவரது சந்ததியினர் என்றும் அழைத்துக்கொண்டனர்.
                            
ரோமனியர் இப்பெயரை ‘எட்ருஷ்கன் (Etruscan)’ இனத்துக் கடவுளான மாரிஸ் (Maris)-இடமிருந்து பெற்றனர். இந்த மாரிஸ்க்கு உள்ள மற்றொரு பெயர் மாரிஸ் ஹஸ்ரன்னா(Maris Husranna). இதன் பொருள் ‘குழந்தை மாரிஸ்’ . நமது ‘பால முருகன்’ ஞாபகம் வருகிறதா? வரத்தான் செய்யும்..எங்கும் நிறைந்த ஞான பண்டிதன் அல்லவா அவன்.

 நார்டிக் டைர் (Tyr):
நார்வே தேசத்து மக்களின் பழங்குடிக் கடவுளான டைர் ஒரு போர்க்கடவுளே. இவரது பெயரிலிருந்துதான் செவ்வாய்க்கிழமையை ஆங்கிலத்தில் குறிக்கும் Tuesdayபெறப்பட்டது.

குஷைட் முரிக் (Murik):
ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா மற்றும் நூபியாவை உள்ளடக்கிய நாடாக ஆதியில் விளங்கிய குஷைட்(Cushite) தேச மக்களின் போர்க்கடவுளின் பெயர் ‘முரிக்’. ஏறக்குறைய முருகா! ஆச்சரியம் தான் அல்லவா? தற்பொழுது அழிந்து போய்விட்ட குஷைட் இன மக்களில் சிலர் மட்டும் கென்யாவில் வசித்து வருகின்றனர் முரிக் பக்தியுடன்!

முருகன் எல்லா தேசங்களிலும் போர்க்கடவுள் என்றும் செவ்வாய் கிரக அதிபதி என்றும் தவத்தில் சிறந்த ஞானிகளால் பாமர மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளான்.
தமிழிலும் ‘செவ்வாய் அதிபதியானதால் முருகன் சேந்தன் ( சிவந்த நிறத்தை உடையவன்) என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டான்; இல்லையேல் திராவிட வேலனுக்கேது சிவந்த நிறம்?

இத்தகு சிறப்பு வாய்ந்த முருகனை தமிழ்க் கடவுள் என்று மட்டும் சொல்லாது உலகக் கடவுள் என்றும் சொல்லலாம்தானே?

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்வ வெற்பைக்
கூறுசெய் தணிவேல் வாழ்க குக்கிடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்ஞைவாழ்க யானைதன் அணங்கும் வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியாரெல்லாம்!


கந்தவேல் நம் முன் வந்து பாதுகாப்பளிக்கும்


எவ்வளவு பெரிய இடைஞ்சலாக இருக்கட்டுமே! தெய்வங்களுக்கு எதிராக ஏதோ தவறு செய்து, அதனால் ஏற்பட்ட பாவமாகக் கூட இருக்கட்டுமே! கந்தவேலிடம் சரணடைந்து விட்டால் போதும்! அவர் நம்மைக் கருணையுடன் காத்தருள்வான்.
காஷ்யபர் என்ற முனிவருக்கு அதிதி என்ற மனைவியிடம் தோன்றியவர்கள் ஆதித்யர்கள் எனப்படும் தேவர்கள். திதி என்ற மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் தைத்திரியர்கள் எனப்படும் அசுரர்கள். இவர்களுக்கு இடையே கடுமையாகச் சண்டை நடக்கும். தேவர்களுக்கு தெய்வங்களின் துணை இருந்ததால், அவர்கள் அசுரர்களைக் கொன்று குவித்தனர். ஒரு கட்டத்தில் அசுரர்களே இல்லாத நிலைமை ஏற்பட்டது. இதுகண்டு திதி தவித்தாள். ஆயிரக்கணக்கில் பிள்ளைகளைப் பெற்றும், ஒன்று கூட தங்கவில்லையென்றால் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!
ஆனால், அவள் ஒரு சிறந்த தாயல்ல.
கணவனுடனும் அடிக்கடி கருத்து வேறுபாடு கொள்வாள். திதிக்கு பல குழந்தைகள் பிறந்தனர். அவர்களை தவவழியில் சென்று இறைவனை அடையுமாறு தந்தை காஷ்யபர் அறிவுறுத்தினார். தாய் திதியோ, ""அவர் கிடக்கிறார், நீங்கள் இந்த உலகத்தையே உங்கள் கைக்குள் கொண்டு வர வேண்டும். உலகெங்கும் அசுரக்கொடி பறக்க வேண்டும்,'' என்றாள். போதாக்குறைக்கு இவர்களுக்கு கிடைத்த குரு சுக்ராச்சாரியாரும் தூபம் போட்டார். சுக்கிரன் இன்பத்திற்கு அதிபதி. இன்பவாழ்வைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்ய வைப்பார்! இது இயற்கை. அசுரக்குழந்தைகளுக்கும் அம்மா, ஆசானின் போதனைகள் மனதில் பதிந்து விட்டன. அப்பாவின் நற்போதனையை ஒதுக்கி விட்டனர். ஆனால், இதன் விளைவை அவர்கள் அனுபவித்தனர். தேவர்கள் ஒன்று கூடி, ஒரு அசுரர் கூட விடாமல் அழித்து விட்டனர். திதி அழுதாள். தனக்கு மேலும் குழந்தைகள் வேண்டும். வம்சம் தழைக்க வேண்டுமென தன் கணவர் காஷ்யபரிடம்
முறையிட்டாள்.
""புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் தான் குழந்தைகள்
பிறக்கும்,'' என்ற காஷ்யபர் மனைவிக்காக யாகத்தைத் துவங்கினார். மிகக்கடுமையான அனுஷ்டானங் களுடன் யாகம் தொடங்கியது.
""காஷ்யபர் சிறந்த மகரிஷி. அவரது யாகம் மட்டும் முற்றுப்பெற்று விட்டால், அசுர இனம் மீண்டும் தலை தூக்கி விடும். நாம் எப்படியேனும், அந்த யாகத்தை நிறுத்தியே ஆக வேண்டும்,'' என முடிவெடுத்தனர்.
இதை தன் ஞானதிருஷ்டியால் அறிந்து விட்டார் காஷ்யபர். அவருக்குத் தெரியும், யாரை அணுகினால் யாகம் வெற்றிகரமாக நடந்து முடியுமென்று! யாகங்கள் சுபமாக முடிய @வண்டும் என்று காஷ்யபர் கந்தவேலை நினைத்தார். அவரது பிரார்த்தனை இதுதான். (யாகம் துவங்கும் ஒவ்வொருவரும் இந்த பிரார்த்தனையைச் சொல்லலாம்)
""யார் அக்னி வடிவாய்
இருக்கிறாரோ, யார் மேஷ (ஆடு) வாகனத்தில் அமர்ந்து வருகிறாரோ, அந்த மூர்த்தி அடியேனையும், யாகத்தையும் காத்தருள வேண்டும். "சிவாக்கினி பூ' என்று வேதங்களால் அழைக்கப்படும் பொருளாய் இருப்பவர் யாரோ, குமரன் என்பவர் யாரோ, திரியம்பகன் என்பவர் யாரோ, அந்தக்கடவுள் என்னையும், யாகத்தையும் காத்தருள வேண்டும்,'' என்றார்.
உடனே முருகப்
பெருமான் வேலுடன் அங்கு தோன்றினார். ""காஷ்யபரே! கவலை வேண்டாம்! என்னை வணங்கியவர்
களின் யாகம் வெற்றிகர மாகத் திகழ எமது வேல் துணை நிற்கும்,'' என்று கூறி மறைந்தார்.
இதையடுத்து தேவர்கள் கலங்கினர். அவர்கள் இரண்டு அசுர சக்திகளை <உருவாக்கிய யாககுண்டத்தில் இருந்து வெளிப்படச் செய்தனர். காஷ்யபர் அவற்றைக் கண்டு நடுங்கினார். மீண்டும் முருகப்பெருமானை வணங்கினார்.
""ஞானசக்திதரா! பாலமுருகா! சரணம், சரணம்'' என்று கதறினார். அக்கணமே அங்கு தோன்றிய முருகப்பெருமான், அந்த அசுரர்களை அழித்தார். யாகம் வெற்றிகரமாக முடிந்தது. திதியும் கருவுற்றாள்.
தன்னை மனதார நம்பியவர்கள் யாராயினும் கைவிடமாட்டான் முருகன். அவன் வரும் முன்
அவனது கந்தவேல் நம் முன் வந்து பாதுகாப்பளிக்கும்.

முருக வழிபாடு


உலகின் பல்வேறு சமயங்களிலும் மாந்ரீக அடிப்படையிலான வழிபாட்டு முறை வழக்கில் இருந்துள்ளது; இப்போதும் நடைமுறையில் உள்ளது.

மந்திரம் என்பதற்கு மன்னும் திறம்- நிலை பெற்றிருக்கும் திறன் என்று பொருள் கொள்ளலாம். யந்திரம் என்பது மந்திர சக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. புலனடக்கத்தோடு இறைவனை மனதில் இருத்தி உள்ளும் புறமும் நிலை நிறுத்திப் பூஜிப்பது யந்திரமுறை. யந்திரங்கள் இறைவனின் மறுவடிவாகவே போற்றப் படுகின்றன.

இத்தகைய வழிபாடுகளில் மந்திர உச்சாடனங்களுடன் மாந்ரீகச் சடங்குகளும் இடம் பெறுகின்றன. ஆக்கல் சக்திகள் தூண்டிவிடப்படுவதன் மூலமாக செயல்கள் நிகழ்ந்து தங்கள் விருப்பங்கள் நிறைவேறு வதால், இவ்வழிபாடு பலராலும் பின்பற்றப் பட்டு வருகிறது. இதில் யந்திரங்கள் கிரியா ஊக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

யந்திரங்கள் எனப்படும் சக்கரங்கள் காகிதத்தில் வரையப்பட்டு கண்ணாடிச் சட்டத்திற்குள் வைக்கப்பட்டோ, மரம் அல்லது உலோகத்தில் கீறல்களாகச் செதுக்கியோ பயன்படுத்தப்படுகிறது. இச்சக்கரங்கள் தியானத்தின்போது மனதை ஒருநிலைப்படுத்தப் பயன்படுகிறது.

முருக வழிபாட்டில் அறு கோணச் சக்கரம் பயன்படுத் தப்படுகிறது. இச்சக்கரத் தில் சம அளவுள்ள இரண்டு சம பக்க முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நேர்எதிர் திசையில் படியு மாறு அமைக்கப்பட்டிருக் கும். இரண்டு முக்கோணங் களுக்கு நடுவில் அமைந் துள்ள புள்ளி உயிர்சக்தியாக- கந்தன் எனக் கொள்ளப் படு கிறது. இதைச் சுற்றியுள்ள உலகின் பல்வேறு சமயங்களிலும் மாந்ரீக அடிப்படையிலான வழிபாட்டு முறை வழக்கில் இருந்துள்ளது; இப்போதும் நடைமுறையில் உள்ளது.

மந்திரம் என்பதற்கு மன்னும் திறம்- நிலை பெற்றிருக்கும் திறன் என்று பொருள் கொள்ளலாம். யந்திரம் என்பது மந்திர சக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. புலனடக்கத்தோடு இறைவனை மனதில் இருத்தி உள்ளும் புறமும் நிலை நிறுத்திப் பூஜிப்பது யந்திரமுறை. யந்திரங்கள் இறைவனின் மறுவடிவாகவே போற்றப் படுகின்றன.

இத்தகைய வழிபாடுகளில் மந்திர உச்சாடனங்களுடன் மாந்ரீகச் சடங்குகளும் இடம் பெறுகின்றன. ஆக்கல் சக்திகள் தூண்டிவிடப்படுவதன் மூலமாக செயல்கள் நிகழ்ந்து தங்கள் விருப்பங்கள் நிறைவேறு வதால், இவ்வழிபாடு பலராலும் பின்பற்றப் பட்டு வருகிறது. இதில் யந்திரங்கள் கிரியா ஊக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.


யந்திரங்கள் எனப்படும் சக்கரங்கள் காகிதத்தில் வரையப்பட்டு கண்ணாடிச் சட்டத்திற்குள் வைக்கப்பட்டோ, மரம் அல்லது உலோகத்தில் கீறல்களாகச் செதுக்கியோ பயன்படுத்தப்படுகிறது. இச்சக்கரங்கள் தியானத்தின்போது மனதை ஒருநிலைப்படுத்தப் பயன்படுகிறது.

முருக வழிபாட்டில் அறு கோணச் சக்கரம் பயன்படுத் தப்படுகிறது. இச்சக்கரத் தில் சம அளவுள்ள இரண்டு சம பக்க முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நேர்எதிர் திசையில் படியு மாறு அமைக்கப்பட்டிருக் கும். இரண்டு முக்கோணங் களுக்கு நடுவில் அமைந் துள்ள புள்ளி உயிர்சக்தியாக- கந்தன் எனக் கொள்ளப் படுகிறது. இதைச் சுற்றியுள்ள தனிவட்ட வளையங்களில்- உள்வட்டத்தில் ஆறு தாமரை இதழ்களும், வெளி வட்டத்தில் பன்னிரண்டு தாமரை இதழ்களும் வரையப் பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி பூபுரம் எனப் படும் மூன்று சம இடைவெளியுடன்- நான்கு பக்கங்களிலும் மூன்று சதுரங்கள் வரையப் பட்டிருக்கும்.

பூபுரம் என்ற வெளிச்சுற்று சதுரச் சுவர்களிலிருந்து தொடங்கி, படிப்படியாக உள்ளடங்கி மனதைக் கட்டுப்படுத்தி, மைய ஈர்ப்புப் புள்ளி யுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டால், தாம் விரும்பு வது எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள "நமசிவாய' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஒட்டி முருகனுக்கு "சரவணபவ' என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், மாரணம் என்னும் ஆறு வகையான பணிகளுக் காகப் பயன்படுத்தப்படுகிறது.

வழிபாட்டு மந்திரத்தின் எழுத்துகளை முறை மாற்றி உச்சரிப்பதன் மூலம் விளைவுகள் வேறுபட்டதாயிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஷடாட்சர மந்திரத்திற்கான யந்திரத்தை அமைக்க குறுக்கும் நெடுக்குமாக ஏழு கோடுகள் வரைந்தால் 36 சிறு கட்டங்கள் கிடைக்கும். அந்தந்த காரியங்களுக்கான வகையில் அந்தக் கட்டங்களில் எழுத்துகளை எழுதி, அவற்றிற் குரிய கோச மந்திரங்களும் குறிக்கப்படும். (முன் பக்க அட்டவணை காண்க.)



இவை வெவ்வேறு முறைகளிலும் எழுதப் படும். இந்த மந்திரங்களை ஆறு வகையான பணிகளுக்காக மரப் பலகைகளில் எழுதி வைத்து, 1008 முறை உச்சரிப்பதன் மூலம் விரும்பிய பலனைப் பெறலாம் எனப்படுகிறது. வசியத்திற்கு வில்வ மரத்திலும், ஆகர்ஷணத்திற்கு வெண் நாவல் மரத்திலும், மோகனத்திற்கு அலரி மரத்திலும், தம்பனத்திற்கு ஆல மரத்தி லும், உச்சாடனத்திற்கு பலா மரத்திலும், மாரணத்திற்கு வில்வ மரத்திலும் எழுதுவதே பலனளிக்கக் கூடியதாம்.

சில மந்திரங்களை பீஜத்தோடும் சிலவற்றை கோசத்தோடும் உச்சரிக்க வேண்டும். தேவை யான பீஜ, கோசங்களைச் சேர்த்து மந்திரங்களை உச்சரிப்பதே பலன் தரும்.

மனனம் செய்பவனை ரட்சிப்பது மந்திர மாகும். மெய்ஞ்ஞானிகள் மந்திர ஜபத்தால் செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்திருக்கி றார்கள். மந்திரங்களை முறையாக உச்சரிப்பதால் அதற்குரிய தேவதையின் திருவுருவம் சூட்சும வடிவில் உபாசகனின்முன் தோன்றுகிறது. மந்திர உச்சாடனம் செய்வதன் மூலம் சூட்சும சலனங்களை ஏற்படுத்தி விரும்பியவற்றை அடைவதோடு இறைவன் திருவருளையும் பெற முடியும்.


"நான்' என்னும் அகங்காரம் சேவலாகவும், "எனது' என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது


ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி மேன்மேலும் சிறப்பு பெறுகிறது.

சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை யாவரும் அறிந்ததே.

சூரபத்மனை முருகப் பெருமான் முற்றிலும் வதம் செய்யாமல் வாகனமாகவும் கொடியாகவும் ஏற்றுக் கொண்டது ஏன் என்ற கேள்விக்கு புராணம் கூறும் தகவலைப் பார்ப்போம்.

முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயிணி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.

சிவ- பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை வேண்டும். எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால்தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, "நான்' என்னும் அகங்காரம் சேவலாகவும், "எனது' என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகன்.

பேரனைச் சுமக்க தாத்தாவிற்கு கஷ்டமா என்ன? அதனால்தான் மயில் வாகனமாக மாறி, பேரனைச் சுமந்தார் தாத்தாவான சூரபத்மன்.

சூரபத்மன் ஆணவத்தை அழிப்பதற் கென்றே அவதரித்தவர் முருகப் பெருமான். இந்த சிவமைந்தன் முற்பிறவி யில் பிரம்மதேவனின் மைந்தனாக- பிரம்மஞானி சனத்குமாரர் என்ற பெயர் தாங்கி முக்காலம் அறிந்த ஞானியாகத் திகழ்ந்தார். ஒருசமயம் சூரர்களைப் போரிட்டு வதம் செய்வதுபோல் கனவு கண்டார்.

அதனை தன் தந்தையான பிரம்மாவிடம், ""தந்தையே! நான் சேனாதிபதியாக நின்று அசுரர்களை வதம் செய்வதாகக் கனவு கண்டேன்'' என்று சொன்னார்.

அதற்கு அவர், ""சனத்குமாரா, உன் கனவு பலிக்கும். ஆனால், நீ பிரம்மஞானியாக இருப்பதால் இந்தப் பிறவியில் அது இயலாத காரியம். அடுத்த பிறவியில் உனக்கு அந்தப் பாக்கியம் கிட்டும்'' என்றார்.

முருகப் பெருமானின் அவதாரத்தை முன்னிட்டு சிவனும் பார்வதியும் சனத்குமாரரைக் காண வந்தார் கள். தியானத்தில் இருந்த சனத்குமாரர் தியானம் முடிவடைந்ததும் தன்முன் சிவனும் பார்வதியும் நிற்பதைக் கண்டு வணங்கினார். அப்போது பரமசிவன், ""மகனே, உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.

அதற்கு சனத்குமாரர், ""நீங்கள் ஒன்றும் எனக்கு வரம் தர வேண்டாம். உங்களுக்கு வேண்டுமானால் நான் வரம் தருகிறேன், கேளுங்கள்'' என்றார்.

சற்றும் கோபம் கொள்ளாத பரமசிவன், ""நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்'' என்றார்.

சனத்குமாரரும், ""உங்கள் விருப்பப்படியே உம் அருளால் மகனாகப் பிறப்பேன்'' என்றார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, ""உம் அருளால் மகனாகப் பிறப்பேன் என்றால், என் பங்கு ஒன்றுமில்லாததுபோல் தெரிகிறதே'' என்றாள்.

""ஆம் அன்னையே. கர்ப்பவாசத்தில் தோன்றி, கீழ்முகமாகப் பிறப்பது எனக்கு அருவருப்பாக இருக்கிறது. எனவே, அருள் கூர்ந்து தங்கள் கணவரின் அருள் பார்வையால் நான் அவதரிக் கும்படி செய்யுங்கள்'' என்றார். பார்வதியும், ""சரி; உன் விருப்பம்போல் நடக்கும்'' என்று ஆசீர் வதித்தாள்.

காலம் கடந்தது. பஸ்மாசுரனைக் கொல்ல சிவபெருமான் மகாவிஷ்ணுவுடன் சென்றபோது, பார்வதி தனித்திருப்பதை அறிந்த பஸ்மாசுரன் பார்வதியைத் தேடி வந்தான். தன் கணவனைப் பிரிந்த சோகத்தில் உருகிக் கொண்டிருந்த பார்வதி, பஸ்மாசுரன் வருவதை அறிந்து அவனிடமிருந்து தப்பிக்க பொய்கையாக மாறினாள். அதுதான் சரவணப் பொய்கை என்று பெயர் பெற்றது.

மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் பஸ்மாசுரன் எரிந்து சாம்பல் ஆனதும், பரமசிவன் கயிலாயம் வரும் வழியில், பார்வதி பொய்கையாக மாறி இருப்பதைக் கண்டு, இதுதான் தக்க சமயம் என்று தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை அந்தப் பொய்கையில் விழும்படி செய்தார்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு குழந்தைகளாக தாமரை மலர்கள்மேல் படுத்திருந்தன. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் போற்றினார் கள். இதனைக் கண்ட பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி ஒன்றாக்கினாள். அந்தக் குழந்தைதான் ஆறுமுகம் கொண்ட சரவணன் என்ற முருகப் பெருமான். இவ்வாறாக சனத்குமாரர் முருகனாக அவதரித் தார். சூரபத்ம வதமும் நிகழ்ந்தது. தேவர்களும் மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வுகள் காரணமாகத்தான் ஐப்பசி மாதம் வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. சஷ்டி திதி அன்று சூரசம் ஹார நிகழ்ச்சி திருச் செந்தூர் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது முருக பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரத நியதிகள் உள்ளன.

தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் பிரசாதத்தை உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். மௌன விரதம் கடைப்பிடித்தால் மிகவும் சிறந்தது. மாலையில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகப் பெருமானை ஆவாகனம் செய்து பூஜித்தல் வேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்தல் சிறப்பாகும். இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங் காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது.

ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவுண்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஆறு ஆண்டுகள் முறைப் படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

கந்தசஷ்டி தொடங்கி ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியன்று விரதம் கடைப்பிடித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; உடல் வளம் பெறும்; குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்; சுபகாரியங்கள் நடக்கும்.

முருகன் திருத்தலங்களிலும் கோவில்களிலும் இந்த சஷ்டி விழா மிகவும் பிரமாதமாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம்.

இதில் முதலிடத்தைப் பெறுவது திருச் செந்தூர். இங்குதான் மணப்பாடு என்னுமிடத்தில் சூரசம்ஹாரம் நடந்தது என்பர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ள கடல், தன் அலைகளால் முருகப் பெருமானை வழிபடுவது போல் திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள குறுக்குத் துறை முருகன் கோவிலுக்குத் தனிச் சிறப் புகள் உண்டு. இங்கு முருகப் பெருமான் சுயம்பு மூர்த்தியாக பாறையில் உருவாகியிருக்கிறார். திருச்செந்தூரில் பாறை யின்மீது முருகன் கோவில் உள்ளதைப்போல், குறுக்குத் துறை முருகன் கோவிலும் பாறையின் மேல் உள்ளது. மேலும் கோவிலின் கிழக்குப் பகுதியில் தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இத்திருத்தலத்தை சின்ன திருச் செந்தூர் என்று சொல்வர். தவிர, இந்த மூலவர் சிலையிலிருந்துதான் கல் எடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவர் சிலை வடிக்கப்பட்டதாகவும் சொல்வர்.

ஐப்பசி மாத தீபாவளி அமாவாசைக்குப்பின் தொடர்ந்து விரதம் கடைப்பிடிக்க இயலாத வர்கள் கந்தசஷ்டி திருநாளில் விரதம் கடைப் பிடித்து, அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் பேறுகள் பெற்று சுகமுடன் வாழலாம்.


ஆறுமுகன் அவதாரம்


வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதாரம் செய்த நாளாகும். ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்தது விசாகம். இதனால் முருகப் பெருமானும் ஆறு முகங்களோடு திகழ்கிறார் என்பது ஐதீகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று. தாவரங்களும், விலங்குகளும், மனிதர்களும் ஓன்றே என்ற உண்மையின் தத்துவத்தை விளக்குதலே இந்நாளின் சிறப்பாகும்.

ஆறுமுகன் அவதாரம்

“அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்ம
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய” என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் கூறுகிறது.

அசுரசக்திகளை அழிக்க பரமனின் நெற்றிக்கண்ணில் உதித்த சக்திச் சுடர்களை அக்னிதேவன் கங்கையில் சரவணப் பொய்கையில் இட, அங்கு தோன்றினர் ஆறு குமாரர்கள். கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அதனால் அக்னிகர்ப்பன், காங்கேயன் (கங்கையின் மைந்தன்), சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது.

சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது என்பதனை, “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே” என்று அருணகிரியார் பாடுவார். 

குழந்தைகளுக்கு பாதிப்பா? குணப்படுத்துவார் முருகப்பெருமான்


குழந்தைகளின் பால்ய வயதில் உண்டாகும் தோஷம் பாலாரிஷ்டம். ஜாதகத்தில் பாவகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஏற்படும் போது இது ஏற்படும். இதனால் ஆயுள், ஆரோக்கியம் பாதிக்கும். சில வேளைகளில் தாய், தாய்மாமன், தந்தைக்கும் தோஷத்தை ஏற்படுத்தும். கிரகச்சேர்க்கை மற்றும் தன்மையைப் பொறுத்து பாதிப்பு அமையும். குருவின் பார்வை இருக்குமானால் இந்த தோஷத்தால் பாதிப்பு வராது.
இத்தோஷம் நீங்க, குழந்தையை முருகன் கோயிலில் சுவாமிக்குத் தத்து கொடுத்து வழிபடுவர். குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்து, சந்நிதியை மூன்றுமுறை வலம் வரவேண்டும். கொடிமரத்தின் முன்போ அல்லது சந்நிதி முன்போ குழந்தையை கிடத்தி, முருகனிடம் ஒப்படைப்பதாக எண்ணி வழிபடவேண்டும். பின், அர்ச்சகரை அழைத்து பிள்ளையைப் பெற வேண்டும். அக்காலத்தில் தட்சணையாக அர்ச்சகருக்கு ஒரு படி தவிட்டைக் கொடுப்பது வழக்கம். பிள்ளைக்கும் கூட "தவிடன்' என்று பெயர் வைப்பர். ஆனால், இப்பழக்கம் மறைந்து, தட்சணை கொடுக்கும் வழக்கம் வந்து விட்டது. இப்பரிகாரத்தின் மூலம் தோஷம் நீங்குவதோடு, முருகப்பெருமான் குழந்தையைக் காத்து அருள்புரிவான் என்பது ஐதீகம்

திருமணத் தடையையும் நீக்கும் அரிய மந்திரத் திருப்புகழ்


நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார். 1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும்.
திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை.

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த 
 மிகவானி லிந்து வெயில்காய 
 மிதவாடை வந்து தழல்போல வொன்ற 
 வினைமாதர் தந்தம் வசைகூற

 குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
 கொடிதான துன்ப மயில் தீர 
 குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து 
 குறைதீர வந்து குறுகாயோ

 மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
 வழிபாடு தந்த மதியாளா 
 மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச 
 வடிவே லெறிந்த அதிதீரா

 அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
  மடியா ரிடைஞ்சல் களைவோனே 
  அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
  அலைவா யுகந்த பெருமாளே.


தை பூசம் விளக்கம்


நமது வள்ளல் பெருமான் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்..

காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும்ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.

தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.

மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது.

அகரம் + உகரம் + மகரம் = ஓம்

தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில்

இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப் படும்.

அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி

  • சந்திரன் என்பது மன அறிவு,
  • சூரியன் என்பது ஜீவ அறிவு.
  • அக்னி என்பது ஆன்மா அறிவு.

சந்திரன் சூரியனில் அடங்கி ,சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தை பூசம்.

மனம் ஜீவனில் அடங்கி,ஜீவன் ஆன்மாவில் அடங்கி,ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்,என்பதை காட்டவே தை பூசம்

நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

மேலும் தை பூசத்தில் அதி காலை ஜோதி தரிசனம் மட்டுமே உண்மை தத்துவமாக வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது.

மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டன.